search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றி பெறும்"

    எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராஜகண்ணப்பன் பேசினார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் அ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அங்குள்ள அண்ணாசிலை அருகே நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். சிவகங்கை, ராமநாதபுரம் ஆவின் சேர்மன் அசோகன், ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் கரு.சிதம்பரம், பேரவை வெற்றிச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தற்போதைய அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான ராஜகண்ணப்பன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 1991-96-ல் என்னுடைய அரசியல் வாழ்க்கையில் அமைச்சர், கட்சியின் பொருளாளர் என பெரிய பொறுப்புகளை வழங்கியது திருப்பத்தூர் தொகுதி. உள்ளாட்சி தேர்தலை நாம் நடத்தவில்லை என்பது உண்மை. காரணம் அன்று கட்சியில் சில பிரச்சினைகள் வந்தது, இன்றைக்கு முடிந்துவிட்டது. வருகிற பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும்.

    12 நாடுகளில் சொத்துக்கள் வாங்கிய நபர்கள் ப.சிதம்பரமும், அவரது மகனும் தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. பா.ஜ.க.வுடன் எங்களுக்கு உறவும் கிடையாது. கூட்டணியும் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்களோ, தொண்டர்களோ கிடையாது. தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக, பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்த திருநாவுக்கரசார் இருக்கிறார். ஆனால் அந்த கட்சியில் 9 தலைவர்கள் உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் யாரும் தலைவர்கள் கிடையாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், நான், மாவட்ட செயலாளர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் தொண்டர்கள் தான். சில அதிகாரிகள் செய்கின்ற தவறுகளால் அ.தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படலாம். எந்த தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க. வெற்றியை பெறும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் திரைப்பட நடிகர் சிங்கமுத்து, நெற்குப்பை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சஞ்சீவி, முன்னாள் நகர துணைச் செயலாளர் பிரேம்குமார், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சின்னையா அம்பலம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரச் செயலாளர் இப்ராம்ஷா நன்றி கூறினார்.
    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்று மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வங்காள மொழி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமராக பொறுப்பேற்க தயார் என்று ராகுல்காந்தி கூறி இருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. அவ்வாறு கூற அவருக்கு உரிமை உண்டு. அதே வேளையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது கடினம்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். அதே போல மாநில கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்டவையும் மிகப்பெரிய வெற்றியை பெற உள்ளன. மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் மத்தியில் அமைய வாய்ப்புள்ளது.

    கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய இரு கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்காது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் துணையுடன்தான் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்கக் கூடிய நிலை உருவாகும்.

    அரசியல் ஆதாயத்துக்காக என்னை கொலை செய்வதற்கு ஒரு கட்சி முயன்றது. அதற்காக கூலிப்படைகளுக்கு முன் பணமும் கொடுக்கப்பட்டது. நான் சாவுக்கு ஒரு போதும் அஞ்ச மாட்டேன்.

    என்னை அழித்து விட்டால் எனது கட்சியை ஒழித்து விடலாம் என்று நினைப்பது மடத்தனம். நான் இல்லாவிட்டாலும் கட்சி என்றென்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கான வழிகள் அனைத்தையும் ஏற்கனவே செய்து முடித்து விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மம்தா பானர்ஜி சில வாரங்களாகவே பா.ஜனதா அதிருப்தி தலைவர்கள் மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். சமீபத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    ×